search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி"

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனதாக்கி கொண்டார். #PVSindhu
    சீனாவின் நான்ஜிங் நகரில்  24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் மற்றும் இந்தியாவின் பி வி சிந்து ஆகியோர் மோதினர்.

    இதில் கரோலினா மரின்  21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் பிவி சிந்து.

    பிவி சிந்து கடந்த ஆண்டும் (2017) இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பிவி சிந்து பதிவு செய்துள்ளார். 
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் வீழ்ந்தார் பிவி சிந்து. #PVSindhu #CarolinaMarin
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர் கொண்டார்.

    இதில் கரோலினா மரின் 21 -19 என முதல் செட்டில் சிந்துவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் 21- 10 என்ற கணக்கில் சிந்துவை அவர் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கரோலினா மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் பிவி சிந்துவை வெற்றி பெற்றார்.
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகேனா யமகுச்சியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து. #PVSindhu
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த அகேனா யமகுச்சியை எதிர் கொண்டார்.

    இதில் பிவி சிந்து 21-16, 24-22  என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    தங்கப் பதக்கத்துக்கான இறுதி போட்டியில் பிவி சிந்து ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
    ×